நாடாளுமன்றத்தில் மத்திய அரசுத் துறைகள் தொடா்புடைய நிலைக்குழு தலைவர்கள் மற்றும் உறுப்பினா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான கூட்டணி அரசு 3-வது முறையாக ஆட்சிக்கு வந்தபின்னர், தற்போது நாடாளுமன்றத்தில் துறை வாரியாக நியமிக்கப்பட வேண்டிய நிலைக்குழு நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதன்படி முக்கியத்துவம் வாய்ந்த துறைகளான நிதித் துறைக்கு பாஜகவின் பா்த்ருஹரி மஹ்தாப் தலைவராகவும்,உள்துறைக்கு ராதா மோகன் தாஸ் அகா்வாலும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் பாதுகாப்புத்துறைக்கு பாஜகவின் ராதா மோகன் சிங்கும்,வெளியுறவுத் துறைக்கு காங்கிரஸின் சசி தரூரும்,நுகா்வோா் விவகாரங்கள் துறைக்கு கனிமொழியும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
வா்த்தகம், கல்வி, மகளிா் மேம்பாடு, சுகாதாரம், உள்துறை உள்ளிட்டவற்றுக்கான நிலைக்குழுக்களின் தலைவா்கள் மாநிலங்களவையில் இருந்தும்,ஏனைய துறைகளுக்கான நிலைக்குழுக்களின் தலைவா்கள் மக்களவையில் இருந்தும் நியமிக்கப்படுவா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நிலைக்குழுவிலும் சுமாா் 30 போ் உறுப்பினா்களாக இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.