சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் பதவியேற்றுக் கொண்டார்.
மும்பை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி கே.ஆர். ஸ்ரீராமை, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து, குடியரசு தலைவர் உத்தரவிட்டிருந்தார். இதனைத்தொடர்ந்து கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட கே.ஆர்.ஸ்ரீராமுக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் இப்ராஹிம் கலிபுல்லா, இந்திரா பானர்ஜி, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் 54வது தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ள கே.ஆர்.ஸ்ரீராம், 2025ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி வரை பதவியில் நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.