திருப்பதி லட்டு விவகாரம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் கோயில்களில் இனிப்புகளை காணிக்கை செலுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இனிப்புகளுக்கு பதிலாக தேங்காய், பழங்கள், உலர் பழங்கள், ஏலக்காய் போன்ற பொருட்களை காணிக்கையாக வழங்குமாறு பக்தர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இதைப்போல வெளியில் இருந்து கொண்டு வரப்படும் பிரசாதங்களுக்கும் பிரயாக்ராஜ் கோயில்களில் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
திருப்பதி லட்டு விவகாரத்தின் எதிரொலியாக அயோத்தி மற்றும் மதுராவில் உள்ள கோயில் பிரசாதங்களிலும் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.