பண்டிகை காலத்தை முன்னிட்டு 108 ரயில்களில் பொதுப் பெட்டிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
சத் பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையையொட்டி இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் 12 ஆயிரத்து 500 பெட்டிகளை இணைத்து இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த 2023-24 ஆம் ஆண்டில் பண்டிகை காலத்தில் 1 கோடி பயணிகள் செல்வதற்காக 4 ஆயிரத்து 429 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டதாக கூறிய அஷ்வினி வைஷ்ணவ், நடப்பாண்டில் 5,975 ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.