கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று நோய் கண்டறியப்பட்டுள்ளது.
கேரளாவுக்கு வந்த ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்தவரே தொற்று பாதிப்புக்குள்ளானது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் எர்ணாகுளத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தொடர் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக கேரளாவில் மலப்புரத்தைச் சேர்ந்த ஒருவர் 1 பி வகை குரங்கம்மையால் பாதிக்கப்பட்டார். இந்நிலையில் குரங்கம்மைக்கு சிகிச்சை அளிக்க நாடு முழுவதும் உள்ள 14 மருத்துவமனைகளில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் தயார் நிலையில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.