கல்வி நிறுவனங்கள், வேலை தேடுபவர்களை உருவாக்காமல், வேலை கொடுப்பவர்களை உருவாக்க வேண்டும் என, துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தனியார் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, தமிழகத்தில் வடஇந்திய சமுதாயத்தினர் பல்வேறு சேவைகளை செய்து வந்தாலும், ஒருசில அரசியல் காரணங்களால் அவை மக்களுக்கு தெரிவதில்லை என கூறினார்.
ஆசிரியர்கள்-மணவர்கள் இடையேயான உறவு வலுப்படும் வகையில், ஆசிரியர்களின் கால்களை மாணவர்கள் கழுவும் நடைமுறை, நமது நாட்டில் ஏற்கனவே பல ஆண்டுகளாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.