லெபனான் போர் நிறுத்த தீர்மானத்தை நிராகரிப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
லெபனானின் துணை ராணுவப் படையான ஹிஸ்புல்லாக்களை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தீவிர தாக்குதல் நடத்தியது. இதில் ஹிஸ்புல்லா ட்ரோன் பிரிவுத் தலைவர் முகமது ஹுசைன் கொல்லப்பட்டார்.
லெபனானில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனால் போர் நிறுத்த தீர்மானத்தை லெபனான் நிறைவேற்றியது.
இந்நிலையில், ஐ.நா. பொது அவையில் உரையாற்றுவதற்காக அமெரிக்காவின் நியூயார்க் நகருக்குச் சென்ற இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, லெபனானின் போர் நிறுத்த தீர்மானத்தை நிராகரிப்பதாகவும், தங்களது இலக்கை அடைவதில் இருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டோம் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.