2047-ஆம் ஆண்டுக்கு முன்னதாகவே இந்தியா வல்லரசாக மாறும் என மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி நம்பிக்கை தெரிவித்தார்.
மகாராஷ்டிர மாநிலம் புனேயில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமராக மோடி 3-ஆவது முறை பொறுப்பேற்று முதல் நூறு நாட்களில் அளப்பரிய சாதனைகளை நிகழ்த்தியதாக கூறினார்.
மேலும், கடந்த 2014-ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சியில் 10-ஆவது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 5-ஆம் இடத்துக்கு முன்னேறியதை மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி நினைவுகூர்ந்தார்.