ஜப்பானின் பிரதமராக முன்னாள் அமைச்சர் ஷிகெரு இஷிபா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஜப்பான் பிரதமராக இருந்த ஃபிமியோ கிஷிடோ, நிதி முறைகேடு புகாரில் சிக்கியதால், பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அடுத்த பிரதமரை தேர்வு செய்வதற்காக லிபரல் கட்சி எம்.பி.க்கள் கூட்டம் டோக்கியோவில் நடைபெற்றது.
இதில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஷிகெரு இஷிபா 215 உறுப்பினர்களின் ஆதரவுடன் பிரதமராக தேர்வானார். அவர் வரும் அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி பதவியேற்கவுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஷிகெரு இஷிபாவை எதிர்த்து போட்டியிட்ட சனே தகைச்சி என்ற பெண் எம்.பி. 194 வாக்குகள் பெற்று வெற்றி வாய்ப்பை தவறவிட்டார். ஒருவேளை சனே தகைச்சி வெற்றி பெற்றிருந்தால், ஜப்பானின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை தட்டிச் சென்றிருப்பார்.