வேலூர் மாவட்டம் காட்பாடியில் நடைபெற்ற ஒரு கோடி பனை விதைகள் நடும் நிகழ்ச்சிக்கு அமைச்சர் துரைமுருகன் தாமதமாக சென்றதால் பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும் ஒரு கோடி பனை விதைகள் நடும் நிகழ்ச்சி கரசமங்கலம் பகுதியில் மாலை 3 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நிகழ்ச்சியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு தொடங்கி வைப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதற்காக அப்பகுதியில் உள்ள குளத்தை சுத்தம் செய்யும் பணியில் 100 நாள் வேலை செய்யும் பெண்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இந்நிலையில் நீண்ட நேரம் ஆகியும் அமைச்சர் வராததால் நிகழ்ச்சிக்கு வந்திருந்த த பெண்கள் ஆத்திரமடைந்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் காலதாமதமாக சென்ற துரைமுருகன் பனை விதைகளை நடும் நிகழ்ச்சியை தொடங்கிவைத்து பொதுமக்களிடையே பேச துவங்கினார். இந்நிகழ்ச்சிக்காக பொது மின் கம்பத்தில் இருந்து மின்சாரம் திருடப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது.