ராணிப்பேட்டை பனப்பாக்கம் சிப்காட்டில் புதிதாக அமையவுள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன உற்பத்தி ஆலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
ராணிப்பேட்டையில் 9 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் வாகன உற்பத்தி ஆலை அமைக்கும் வகையில் தமிழக அரசுக்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கும் கடந்த மார்ச் மாதம் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டது.
அந்த வகையில், வாகன உற்பத்தி ஆலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அடிக்கல் நாட்டி கட்டுமான பணியைத் தொடங்கி வைத்தார்.
இந்த ஆலையில் ஆண்டுக்கு 2 லட்சம் கார்கள் தயாரிக்க இலக்கு நிர்ணயித்திருப்பதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய ஆலையின் மூலம் நேரடியாக 5 ஆயிரம் பேருக்கும், மறைமுகமாக 15 ஆயிரம் பேருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.