விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர்,
சாத்தூர் அருகே உள்ள ஒட்டம்பட்டி கிராமத்தில் கந்தசாமி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வந்தது. இங்கு தீபாவளி விற்பனைக்காக தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் இருப்பு அறையில் வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் ஆலையில் திடீரென ஏற்பட்ட விபத்தில் பட்டாசுகள் வெடித்து சிதறின. இதனால் ஏற்பட்ட அதிர்வு சாத்தூர் சுற்றுவட்டார பகுதியில் 15 கிலோ மீட்டர் தூரம் வரை உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினர். இந்த விபத்தில் இதுவரை உயிர் சேதமோ காயமோ ஏற்படவில்லை என கூறப்படும் நிலையில்,
இதுதொடர்பாக சாத்தூர் நகர் போலீசார் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து பட்டாசு ஆலை மேலாளர் சரவணன் என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் இருவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.