ஜம்மு-காஷ்மீரின் குல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் உள்ள பகுதியில் மோப்ப நாய் உதவியுடன் ராணுவ வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
ஜம்மு- காஷ்மீர் சட்டப் பேரவைத் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சியில் தீவிரவாதிகள் ஈடுபடுவதாக கிடைத்த தகவலின்பேரில், அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், குல்காமில் ராணுவ வீரர்களை நோக்கி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதால், அவர்களை வேரறுக்கும் முயற்சியில் ராணுவம் களமிறங்கியது.