வார விடுமுறையையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவிக்கு நாள்தோறும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் இன்று வார விடுமுறை என்பதால் திற்பரப்பு அருவியில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
அருவியில் கொட்டும் நீரில் சுற்றுலாப் பயணிகள் தங்கள் குடும்பத்தினருடன் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். சுற்றுலாப் பயணிகள் அதிக எண்ணிக்கையில் குவிந்ததால் திற்பரப்பு அருவிப் பகுதியில் கடை நடத்தும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
















