சென்னை கிண்டி ரயில் நிலையத்தில் மல்டி லெவல் கார் பார்க்கிங் மறு உருவாக்கப் பணிகள் தொடங்கியுள்ளது.
நாள்தோறும் 65 ஆயிரம் பயணிகள் வந்து செல்லும் வகையிலும், 150 கார்கள் வரை பார்க்கிங் செய்து கொள்ளும் வகையிலும் மறு உருவாக்கம் செய்யப்படுகிறது.
இதில், பார்க்கிங் கட்டணம் ஒவ்வொரு 4 மணி நேரத்திற்கும் 25 ரூபாயாகவும், மாதாந்திர பாஸ் 3 ஆயிரத்து 750 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த வசதியை பொது மக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் இங்கு வணிக வளாகமும் வருகிறது.