கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள புன்னமடா ஏரியில் பிரசித்தி பெற்ற படகுப் போட்டி வெகு உற்சாகமாக நடைபெற்றது.
ஆலப்புழாவில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமையன்று புன்னமடா ஏரியில் வருடாந்திர நேரு டிராபி படகுப் போட்டி நடைபெறும்.
இந்தியாவில் நடைபெறும் படகுப் போட்டிகளிலே இது மிகவும் பிரபலமானது. இந்நிலையில், படகுப் போட்டியில் பங்கேற்ற வீரர்கள் போட்டி போட்டு படகை செலுத்தினர். இதனை ஏராளமான பொது மக்களும், சுற்றுலா பயணிகளும் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.