பெய்ரூட் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதல் மிகுந்த கவலையை அளிப்பதாக ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற்ற ஐநா பொதுக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் குட்டெரஸ் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் பதற்றங்கள் மிகுந்த வருத்தத்தை அளிப்பதாகத் தெரிவித்தார்.
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் கடந்த 24 மணி நேரத்தில் நடந்த வியத்தகு தாக்குதலை எண்ணி கவலையடைந்ததாக கூறிய அவர், லெபனான் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
லெபானின் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த குட்டெரஸ், லெபனானில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சேவை செய்யும் யுனிசெப் அதிகாரிகள் தடுத்த நிறுத்தப்பட்ட சம்பவத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.