பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் லெப்டோஸ்பிரோசிஸ் ( leptospirosis ) நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் காய்ச்சல் காரணமாக மொஹாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், மருத்துவமனை வெளியிட்டுள்ள தகவலில், முதலமைச்சர் பகவந்த் மான் லெப்டோஸ்பிரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரிடம் இரண்டு செல்ல நாய்கள் இருப்பதாகவும், அதில் ஒரு நாயிலிருந்தே அவருக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகக்கிப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. முதலமைச்சர் பகவந்த் மானுக்கு நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நலம் சீரான முறையில் முன்னேற்றம் அடைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், லெப்டோஸ்பிரோசிஸ் நோய்க்கான அவரது ரத்த பரிசோதனைகள் மீண்டும் நேர்மறையாக வந்துள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
முதலமைச்சர் பகவந்த் மான் விரைவில் குணமடைய வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் சரண்ஜீத் சிங் சன்னி கூறியுள்ளார்.
சம்கௌர் சாஹிப் பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரு முதலமைச்சாரல் தன்னைக் கவனித்துக் கொள்ள முடியவில்லை என்றால், அவர் எப்படி பஞ்சாபை கவனித்துக் கொள்ள முடியும் எனக் கேள்வி எழுப்பினார்.