மத்தியப்பிரதேசத்தில் சாலையோரம் நின்ற லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் இருந்து நாக்பூருக்கு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அதிகாலை மைஹார் பகுதி அருகே சென்ற போது சாலையோரம் நின்று கொண்டிருந்த டிப்பர் லாரி மீது பேருந்து மோதியது.
இதில் விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இது குறித்து தகவலறிந்து சென்ற போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் மைஹார் எஸ்.பி. தெரிவித்துள்ளார்.