பீகாரில் பாக்மதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை கனமழையால் உடைந்து சேதமடைந்துள்ளது.
பீகார் மாநிலத்தில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கனமழையால் நீர்நிலைகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.
கந்தக், கோசி, பர்ஹி கந்தக், மஹாநந்தா உள்ளிட்ட நதிகளின் நீர்மட்டம் உயர்ந்து வரும் நிலையில், பெல்வா பகுதியில் பாக்மதி ஆற்றின் மீது குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை உடைந்து சேதமடைந்துள்ளது.
இந்நிலையில், தடுப்பணையில் சேதமடைந்த பகுதியில் மணல் மூட்டைகளை கொண்டு பொதுமக்கள் சரிசெய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.