பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு தமிழக பாஜகு மாநில தலைவர் அண்ணாமலை பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இன்று பிறந்த நாள் கொண்டாடும், தமிழக பாஜக மாநில ஒருங்கிணைப்புக் குழு தலைவரும், அகில இந்திய பாஜக தேசியச் செயற்குழு உறுப்பினருமான, அண்ணன் ஹெச்.ராஜா அவர்களுக்கு, இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அண்ணன் ராஜா அவர்கள், நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன், தொடர்ந்து இளைஞர்களை வழி நடத்த வேண்டுமென்று, இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதேபோல் முன்னாள் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும், பாஜக
தேசிய செயற்குழு உறுப்பினருமான குஷ்பு அவர்களுக்கு, அண்ணா மலை பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார். இநல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன் மக்கள் பணி தொடர இறைவனை வேண்டிக் கொள்வதாக அண்ணாமலை கூறியுள்ளார்.