நெல்லை மாவட்டம், காரையார் வரசித்தி பேச்சியம்மன் கோயிலில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கொடை விழா நடத்த வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையின் காரையாறு பகுதியில் அமைந்துள்ள வரசித்தி பேச்சியம்மன் கோயிலில் கடந்த 24ஆம் தேதி கால்நடும் நிகழ்ச்சியுடன் கொடை விழா தொடங்கியது.
கொடை விழாவை முன்னிட்டு வனப்பகுதியை ஒட்டியுள்ள 30க்கும் மேற்பட்ட வீடுகளை காலி செய்யுமாறு வனத்துறை தெரிவித்த நிலையில், இருதரப்பு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில், வனவிலங்குகளுக்கு இடையூறு தரும் விதமாக பட்டாசு வெடிக்க தடை, ஒலி-ஒளி அமைப்பதற்கு தடை போன்ற கட்டுப்பாடுகளை பக்தர்கள் ஏற்றுக் கொண்டதால் கோயில் திருவிழா நடத்த வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.
மேலும், காலை முதல் மாலை 5 மணி வரை மட்டுமே வரசித்தி பேச்சியம்மன் கோயிலுக்கு பக்தர்கள் சென்று வரவேண்டும் என வனத்துறை உத்தரவிட்டுள்ளது.