காங்கிரஸ் மேடைகளில் பாகிஸ்தான் ஆதரவு முழக்கங்கள் எழுப்பப்படுவதாக பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான அமித்ஷா குற்றஞ்சாட்டி உள்ளார்.
ஹரியானா சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி குருகிராமில் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், காங்கிரஸ் மேடைகளில் முழங்கப்படும் பாகிஸ்தான் ஆதரவு கோஷம் தொடர்பாக ராகுல் காந்தி மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பாக கேள்வி எழுப்பினார்.
ஒருசாராரை திருப்திப்படுத்தும் அரசியலில் காங்கிரஸ் மூழ்கிவிட்டதாக குற்றம்சாட்டிய அவர், இன்னும் 3 தலைமுறையானாலும் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வழிவகை செய்த சட்டப் பிரிவு 370-ஐ திரும்பக் கொண்டுவர முடியாது எனத் தெரிவித்தார்.
காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் வாரிசுகளை முன்னிலைப்படுத்துவதில் அக்கறை காட்டியதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.