காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மேடையில் பேசிக் கொண்டிருந்த போது திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அவரை கட்சி நிர்வாகிகள் கைத்தாங்கலாக பிடித்தனர்.
ஜம்மு- காஷ்மீர் சட்டப் பேரவைத் தேர்தலின் இறுதிகட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 1-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, கதுவாவில் பிரசாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மேடையில் பேசிக் கொண்டிருந்த போது நா தழுதழுத்த குரலில் பேசினார்.
மேலும், அவரது உடல் நடுங்கியதால், காங்கிரஸ் நிர்வாகிகள் கார்கேவை கைத்தாங்கலாக பிடித்தனர்.
அவர்களின் உதவியுடன் தொடர்ந்து அவர் பேசினார். அப்போது தனக்கு 83 வயதாவதாகவும், ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து கிடைக்க தொடர்ந்து போராடுவேன் என்றும் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சென்ற கார்கே, உடனடியாக வீடு திரும்பினார்.