நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்ததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
இந்நிலையில் நாகூர், வேளாங்கண்ணி, சிக்கல் பரவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இந்த மழையால் சம்பா சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.