மத்தியில் பிரதமர் மோடி 3-ஆவது முறையாக ஆட்சிக்கு வந்த நூறு நாளில், பி மற்றும் சி பிரிவு நகரங்களில் 300 எஃப்எம் நிலையங்கள் தொடங்கப்பட்டதாக மத்திய அமைச்சர் எல். முருகன் பெருமிதம் தெரிவித்தார்.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், வானொலியின் திறனும், பங்களிப்பும் சமூகத்தில் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்துவதை பிரதமர் மோடி உணர்ந்ததால் தான் இந்த சாதனையை நிகழ்த்த முடிந்ததாக குறிப்பிட்டார்.
மேலும், நமது வாழ்வில் வானொலியானது அளப்பரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் எல். முருகன் கூறினார்.