மகாராஷ்டிராவில் கோசாலையில் நாட்டு மாடுகளைப் பராமரிக்கும் வகையில், ஒவ்வொரு மாட்டுக்கும் தினமும் தலா 50 ரூபாய் மானியம் வழங்க அமைச்சரவை முடிவு எடுத்தது.
மகாராஷ்டிராவில் நாட்டு மாடுகளின் எண்ணிக்கை குறைந்ததால், அதற்குத் தேவையான தீவனம் கிடைக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019-இல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, அம்மாநிலத்தில் 46 லட்சத்து 13 ஆயிரத்து 632 நாட்டு மாடுகள் இருந்தது தெரியவந்தது.