முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத்கோவிந்த் இன்று பிறந்த நாள் கொண்டாடும் நிலையில் அவருக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், தேசத்திற்கான உங்கள் உன்னதமான சேவையும், தேசத்தின் விழுமியங்களை நிலைநிறுத்துவதற்கான அர்ப்பணிப்பும் நிகரற்றது.
உங்கள் ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சிக்காக நான் எப்போதும் பிரார்த்தனை செய்கிறேன் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இதேபோல் மத்தியப் பிரதேசத்தின் பாஜக மாநிலத் தலைவர் விடி சர்மாவுக்கு எல்.முருகன் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு உங்களுக்கு தொடர்ந்து வெற்றியையும், நல்ல ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் தரட்டும். தேசத்திற்கு உங்களின் அயராத சேவை உண்மையிலேயே ஊக்கமளிக்கிறது என எல்.முருகன் கூறியுள்ளார்.