சாலை பணிகள் தொடர்பாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தலைமையில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் இன்று கலந்து கொண்டேன். தமிழகத்தில் 1031 கிமீ தொலைவிற்கு நடைபெற்று வரக்கூடிய 35 நெடுஞ்சாலைகளின் திட்டப் பணிகளானது, விரைந்து பணிகள் நிறைவு பெற்று மக்களின் முழுமையான பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுவது பற்றி ஆலோசிக்கப்பட்டது.
இந்த நெடுஞ்சாலைகள், தமிழகத்திலிருந்து மற்ற மாநிலங்களுக்கு இடையேயான இணைப்பை வலுப்படுத்துவதுடன், பொருளாதாரத்தில் தமிழகத்தை மேலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்த மாநிலமாக மாற்றும்.
இந்தக் கூட்டத்தில், மாண்புமிகு சாலைப் போக்குவரத்துத் துறை மத்திய இணை அமைச்சர் AjayTamta மத்திய இணை அமைச்சர் hdmalhotra
,அமைச்சர் எவ.வேலு மற்றும் துறை சார்ந்த மத்திய, மாநில அரசு அதிகாரிகள் கலந்து கொண்டார்கள் என எல்.முருகன் தெரிவித்துள்ளர்.