உலகில் தீவிரவாதத்துக்கு இடமில்லை என்றும், அமைதியை நிலைநிறுத்த மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளுக்கு இந்தியா உதவிகரமாக இருக்கும் எனவும் பிரதமர் மோடி உறுதியளித்தார்.
இது தொடர்பாக எக்ஸ் தளப் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில்,
மேற்கு ஆசியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள மேம்பாடுகள் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பேசியதாக தெரிவித்துள்ளார்.
உலகில் தீவிரவாதத்துக்கு இடமில்லை என்றும், பிராந்திய விரிவாக்கத்தை தடுப்பதையும், பிணைக் கைதிகள் அனைவரையும் பாதுகாப்பாக விடுவிப்பதையும் உறுதி செய்வது முக்கியமானது எனவும் கூறியுள்ளார்.
மேலும், அமைதி மற்றும் நிலைத்தன்மை நிலவ மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளுக்கு இந்தியா உதவிகரமாக இருக்கும் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.