நாகை மாவட்டம், கீழ்வேளூர் பகுதியில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு நடைபெற்றதாக புகார்கள் எழுந்த நிலையில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிமுக ஆட்சியின் போது கீழ்வேளூர் பகுதியில் தனி அலுவலர்கள் மற்றும் ஊராட்சி செயலர்கள் மேற்பார்வையில் அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வந்தன. அப்போது ஆதமங்கலம், பட்டமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் ஏராள வீடுகள் கட்டப்பட்டதாக பதிவுகள் இருந்தன.
இதனை ஆய்வு செய்த லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் 149 வீடுகள் முறைகேடாக கட்டப்பட்டதை கண்டறிந்தனர். மேலும் அதிகாரிகள் விசாரணை நடத்திய போது தங்கள் கணக்கிற்கு பணம் வரவில்லை என பயனாளிகள் தெரிவித்துள்ளனர்.
இதனை புகாராக பெற்றுக்கொண்ட அதிகாரிகள் முறைகேடு தொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.