சென்னை விருகம்பாக்கத்தில் பாஜக உறுப்பினர் சேர்க்கை பணியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் ஈடுபட்டார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், தமிழக பாரதிய ஜனதா சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் உறுப்பினர் சேர்க்கை பணிகளின் ஒரு அங்கமாக, சென்னை விருகம்பாக்கம் பகுதியில், சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன்
அவர்களுடன் இணைந்து உறுப்பினர் சேர்க்கை பணிகளில் ஈடுபட்டோம்.
அப்பகுதியைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகளோடு இணைந்து, 127-வது வார்டு பூத் எண் 1-ல் உள்ள பொதுமக்கள், நமது கட்சியில் உறுப்பினராக இணைவதன் அவசியங்களை நாம் விளக்கியதன் அடிப்படையில் உறுப்பினராக இணைந்து கொண்டார்கள் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்