பண்டிகை காலத்தை ஒட்டி சென்னையில் ஆச்சி குழுமத்தின் டெக்ஸ்டைல் பிரிவான டயடெம் துணிக்கடையில் ஆஷிரா சில்க்ஸ் எனும் புதிய வகை கலெக்ஷென்களை அறிமுகம் செய்யப்பட்டது.
தியாகராய நகரில் உள்ள டயடெம் துணிக்கடையில் ஆஷிரா சில்க்ஸ் எனும் புதிய வகை கலெக்ஷென்களை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் டயடெம் துணி கடையின் நிறுவனர் ஷைனி அஷ்வி, ஆச்சி குழும நிறுவனர் பத்மசிங் ஐசக், பிரியா தயாநிதிமாறன், நடிகை கீர்த்தி ஷெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதனைதொடர்ந்து பேசிய டயடெம் துணிக்கடையின் நிறுவனர் ஷைனி அஸ்வின், கொரியன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வாடிக்கையாளர்களின் நிறத்திற்கு ஏற்றார்போல ஆஷிரா சில்க்ஸின் ஆடைகள் வடிவமைக்கப்படுவதாக கூறியுள்ளார்.
இதனையடுத்து பேசிய ஆச்சி குழும நிறுவனர் பத்மசிங் ஐசக், டயடெம் நிறுவனத்தின் ஆஷிரா சில்க்ஸ் பண்டிகை நாட்களில் பெண்களுக்கு விருந்து போல் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய நடிகை கீர்த்தி ஷெட்டி, டயடெம் நிறுவனத்தின் ஆஷிரா கலெக்ஷென்களில் தனக்கு தேவையான அனைத்து ஆடைகளும் சிறப்பாக உள்ளதாகவும், வாடிக்கையாளர்களிடம் வரவேற்பை பெற்று இருப்பதாகவும் கூறியுள்ளார்.