விசிகவின் மது ஒழிப்பு மாநாட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவல் ஆய்வாளரை தள்ளிவிட்டு அக்கட்சியின் மாவட்ட செயலாளர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அராஜகத்தில் ஈடுபட்டனர்.
உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற விசிகவின் மது ஒழிப்பு மாநாட்டில் தொண்டர்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு பணிகளுக்காக சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.
ந்த நிலையில், கடலூர் மாவட்ட செயலாளரும், விசிக பிரமுகருமான திராவிட மணி என்பவர் மாநாட்டிற்கு தனது காரில் தனது ஆதரவாளர்கள் உடன் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த உளுந்தூர்பேட்டை பெண் காவல் ஆய்வாளர், கூட்டம் அதிகளவில் இருப்பதால் காரை விவிஐபிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் நிறுத்திவிட்டு நடந்து செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த திராவிட மணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் பெண் காவல் ஆய்வாளரை தள்ளிவிட்டு அங்கிருந்து காரில் சென்றனர்.