மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்துள்ளார்.
இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து, அவரது மனைவி லதா ரஜினிகாந்திடம் பிரதமர் மோடி நலம் விசாரித்தார் எனவும் அப்போது ரஜினிகாந்த் விரைந்து குணம் பெற வேண்டுமென பிரார்த்திப்பதாக மோடி தெரிவித்தார் எனவும் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, ஸ்டென்ட் பெருத்தப்பட்ட ரஜினிகாந்த் உடல்நிலை சீராக உள்ளதாகவும். அவர் விரைந்து குணமடைந்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.