தன்னை ஊக்குவித்து பேசிய ஆந்திர துணை முதலமைச்சர் பவன்கல்யாணுக்கு நன்றி தெரிவிப்பதாக நடிகர் யோகிபாபு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய ஆந்திர துணை முதலமைச்சர் பவன்கல்யாண், தமிழ்திரைப்பட நடிகர் யோகி பாபுவின் நடிப்பு தனக்கு மிகவும் பிடிக்கும் என தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த நடிகர் யோகிபாபு அவருக்கு நன்றியை தெரிவிப்பதாகப் பதிவிட்டுள்ளார்.