தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடைபெற்ற கோயில்களின் கட்டடங்கள் குறித்து உரிய ஆய்வு நடத்தி, வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு அமைப்பாளர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்ட பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது :
பழனி ராஜாகோபுரம் ஒரு புறம் உடைந்துள்ளது ஆகம விதிப்படி விரைவில் சரி செய்யப்படும் என கோவில் அதிகாரி கூறியுள்ளார் கோபுரம் எப்படி விழுந்தது என தெரிய வேண்டும்.
திராவிட மாடல் அரசுக்கு தங்கச் சுரங்கமே 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட இந்து கோவில்கள் அதன் சொத்துக்களும் தான், இரண்டாவது டாஸ்மார்க். இது இரண்டும் இல்லாமல் திராவிட மாடல் அரசு ஜீவித்திருக்க முடியாது.
கோவில் கட்டுமானத்தில் தரமான பொருட்களை உபயோகப்படுத்தியிருந்தால் இந்த சம்பவம் நடந்திருக்க வாய்ப்பில்லை. பழனி முருகன் கோவிலை மையப்படுத்தி அரசியல் நடத்தும் கட்சியாக திராவிட மாடல் அரசு செயல்படுகிறது.
பழனி கோவிலில் மாநாடு எதற்கு நடத்தினார்கள்? அதனால் ஆன்மீகத்திற்கு என்ன மேம்பாடு கிடைத்தது என்ன என்பது கேள்விக்குறி-
அந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட விளையாட்டு துறை அமைச்சர் இது ஆன்மீக மாநாடு அல்ல என பேசுகிறார். பின்னர் எதற்காக மாநாடு நடத்துகிறீர்கள்?
எவ்வளவு பெரிய மோசடி பேர்வழிகள். பழனி கோவிலில் நன்றாக இருக்கும் சுவரை இடித்துவிட்டு மீண்டும் சுவர் கட்டுகிறார்கள். கட்டுமான பணிகளில் அதிக சதவீதம் பணம் கிடைக்கின்றது. பழனி ஒரு கோவிலை வைத்து அறநிலைத்துறை சம்பாதிக்கிறது என நிரூபித்திருக்கிறது பஞ்சாமிர்தத்தை உடைத்து பார்த்தால் நுரைத்து போயிருக்கிறது பஞ்சாமிர்தம் கெட்டுப் போயிருந்தால் தான் அப்படி இருக்கும் அதனை இந்துமத ஆர்வலர் ஒருவர் படமெடுத்து வெளியிட்டதால் அவர் மீது வழக்கு உள்ளது
இப்போதும் அறநிலைத்துறையும் அரசாங்கமும் நேற்று அதனை படம் எடுத்தது யார் அது எப்படி தொலைக்காட்சிக்கு சென்றது இதைப்பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்களே தவிர எப்படி பஞ்சாமிர்தம் உடைந்தது என்ன காரணம் என கண்டுகொள்ளவில்லை என ஹெச். ராஜா தெரிவித்தார்.