காங்கிரஸ் பொய்களின் தொழிற்சாலை என பாஜக எம்.பி.அனுராக் தாகூர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக சண்டிகரில் பேட்டியளித்த அவர், காங்கிரஸ் அரசு பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்றும், சாவர்க்கரை காங்கிரஸ் அவமரியாதை செய்ததை இந்தியா பொறுத்துக் கொள்ளாது எனவும் தெரிவித்துள்ளார். சட்டப்பிரிவு 370 ஜவஹர்லால் நேருவின் தவறு என்றும் அதற்காக அவர்கள் ஒருபோதும் மன்னிப்பு கேட்கவில்லை எனவும் கூறியுள்ளார்.
ஹரியானாவில் அவர்கள் ஆட்சியில் இருந்தபோது சுவாமிநாதன் கமிட்டி அறிக்கையை ஏன் அமல்படுத்தவில்லை என அவர் கேள்வி எழுப்பினார்.
பாஜக அரசை தேர்ந்தெடுக்க ஹரியானா பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர். மூன்றாவது முறையாக பிரதமர் மோடி தலைமையிலான அரசை தேர்ந்தெடுத்து தற்போது ஹரியானாவில் மூன்றாவது முறையாக பாஜக ஆட்சியை அமைக்கவுள்ளனர்.
இமாச்சல பிரதேச காங்கிரஸ் அரசு பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை… ராகுல் காந்தி, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை ஏன் நிறைவேற்றவில்லை என்று கேட்கிறேன் என அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.