மாநாட்டின் பாதுகாப்புக்கு சென்ற பெண் காவலரையே விசிகவினர் தாக்கியுள்ளனர் என்றும், இதுதான் அவர்களது உண்மை முகம் என்றும் தமிழக பாஜக ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் சேர்க்கை பொதுக்கூட்டத்திற்கு தமிழக பாரதிய ஜனதா கட்சியின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச் ராஜா கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ‘கூறியதாவது : தனது மகனை அடுத்த முதல்வராக கொண்டு வரவேண்டும் என்பதை தவிர மக்கள் மீது எந்த அக்கறையும் முதல்வருக்கு இல்லை.அடுத்த தலைமுறை மக்கள் குறித்து திராவிட மாடல் அரசு கவலைப்படுவதில்லை
மதுக்கடைகளை திறப்பது மாநில அரசு. ஆனால் மதுக்கடைகளைம மூடுவது மத்திய அரசா? மதுக்கடைகளை திறந்து ஒவ்வொரு ஆண்டும் பல கோடி ரூபாய் நிர்ணயம் செய்து வரும் தமிழக அரசு தற்போது மதுக்கடைகளில் மூடுவதற்கு சாவி மத்திய அரசிடம் உள்ளது என மக்களை ஏமாற்றி வருகின்றனர்.
திருமாவளவன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடத்திய மாநாடு மது ஒழிப்பு மாநாடா என்பதற்கு பதிலாக மது உற்பத்தியாளர்கள் பங்குபெறும் மாநாடு என வைத்திருக்கலாம்.
மாநாட்டிற்கு பாதுகாப்புக்கு வந்த பெண் காவலரை அடித்து தூக்கி எறிந்துள்ளனர் இதுதான் விடுதலை சிறுத்தைகள் நடத்தும் மாநாடு உண்மை முகம் இதுதான்.
சரக்கு மிடுக்கு பேச்சுக்கு சொந்தக்காரர் திருமாவளவன். காந்தியடிகள் பற்றியும் காந்தி மண்டபம் குறித்தும் காந்தி மண்டபத்தை சுற்றி மது பாட்டில்கள் இருந்தது பற்றியும் ஆளுநர் பேசியதற்கு சட்டத்துறை அமைச்சருக்கு கோபம் வருகிறது. ஆனால், ஆளுநர் சரியாகவே பேசியுள்ளார்.
ஆளுநர் கடந்த மூன்று ஆண்டுகளில் தலித் மக்களுக்கு எதிரான குற்றங்கள் 50% அதிகரித்து உள்ளது என தெரிவித்துள்ளார். துணை முதல்வர் என்பது லேபில்தான். இதனால் எந்த மாற்றமும் வரப்போவதில்லை என ஹெச்.ராஜா கூறினார்.