வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறும் என்று தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு எழுதியுள்ள கடிதத்தில், இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி 2025ஆம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியை தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.
அதன்படி நவம்பர் 9, 10, 23, 24 ஆகிய 4 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளதாகவும், புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி நடைபெற உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சிறப்பு முகாமுக்கு தேவையான வாக்காளர் படிவங்களை தயாராக வைத்திருக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். ஜனவரி 01, 2025 அன்று 18 வயதைப் பூர்த்தி செய்பவர்கள் புதிதாக வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.