சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நவராத்திரி கொலு நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கியுள்ளது. நவராத்திரி கொலு நிகழ்ச்சியில் பொதுமக்களும் கலந்துகொள்கின்றனர். இது தொடர்பான தொகுப்பை தற்போது காணலாம்…..
சென்னை ஆளுநர் மாளிகையில் 10 நாட்கள் நடைபெறும் நவராத்திரி கொலு விழாவை ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று தொடங்கி வைத்தார். வில்லு பாட்டுடன் நவராத்திரி விழா கொண்டாட்டம் தொடங்கியது.
ஆளுநர் மாளிகையில் வரும் 12ஆம் தேதி வரை நடைபெறும் நவராத்திரி கொலு விழாவில் பொதுமக்களும் பங்கேற்கலாம். இதற்காக முன்பதிவு செய்யும் வேண்டும் என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.
நாளொன்றுக்கு அதிகபட்சமாக 150 பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படும். நவராத்திரி விழா நடைபெறும் நாட்களில் தினமும் மாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை கலை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
மாணவர்கள் கலைநிகழ்ச்சிகள், வில்லு பாட்டு ஆகியவை நவராத்திரி கொலு விழாவில் நடைபெற உள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவி வருகைக்கு பிறகு ஆளுநர் மாளிகையில் மூன்றாவது முறையாக நவராத்திரி கொலு விழா கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.