சென்னையில் நாளை மறுநாள் நடைபெறவுள்ள வான் சாகச நிகழ்வுக்கான ஒத்திகைகள் மெரினாவில் நிறைவு பெற்றன.
இந்திய விமானப்படையின் 92வது நிறுவன தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில், நாளை மறுநாள் பிரம்மாண்ட வான் சாகச நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் அனைத்து வகை போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவையும், சாரங் மற்றும் சூரியகிரண் வான்சாகச குழுக்களும் பங்கேற்கின்றன.
இந்த சாகச நிகழ்ச்சியை பொதுமக்கள் இலவசமாக பார்வையிடலாம். வான் சாகச நிகழ்வை முன்னிட்டு கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த ஒத்திகைகள் இன்றுடன் நிறைவு பெற்றன.
இந்த ஒத்திகை நிகழ்வு குறித்து பேட்டியளித்த இந்திய விமான படையின் Air Marshal நாகேஷ் கபூர், மெரினா கடற்கரையில் சாகச நிகழ்வை பார்க்க ஆயிரக்கணக்கான இளைஞர்கள் குவிந்ததாக கூறினார்.
அவர்களில் பலர் விமானப்படையில் இணைந்து, எதிர்காலத்தில் இதுபோன்ற பல சாகசங்களை நிகழ்த்துவார்கள் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.