திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நவராத்திரியையொட்டி, வீட்டில் ஆயிரக்கணக்கான கொலு பொம்மைகளை கொண்டு தம்பதியினர் வழிபாடு நடத்தினர்.
நவராத்திரி விழா நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. வீடுதோறும் கொலு அமைத்து நாள்தோறும் பெண்கள் பூஜைகள் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், பழனி அண்ணாநகரை சேர்ந்த ஹரிஹர முத்து – உஷா தம்பதி, கடந்த 30 ஆண்டுகளாக நவராத்திரி விழாவின்போது ஆயிரக்கணக்கான பொம்மைகள் கொண்டு கொலு அமைத்து வழிபட்டு வருகின்றனர். அதன்படி இந்த ஆண்டும் கொலு வைத்துள்ள நிலையில், ஏராளமான பெண்கள் தங்கள் வீட்டுக்கு வந்து சுவாமியை வழிபட்டு செல்வதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
















