இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக லெபனான் தெரிவித்துள்ளது.
ஈரானில் உள்ள அணு ஆயுத தளங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு இஸ்ரேல் முயற்சிப்பதாக தகவல் வெளியாகிய நிலையில், லெபனான் – இஸ்ரேல் இடையே கடுமையான போர் பதற்றம் நிலவியது.
இந்நிலையில் லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 127 குழந்தைகள் மற்றும் 261 பெண்கள் உட்பட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
லெபனான் மீது தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.