திருப்பதி மலையில் அமைக்கப்பட்டுள்ள மெகா கிச்சனை அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு திறந்து வைத்தார்.
திருப்பதி மலைக்கு வரும் பக்தர்களுக்கு இலவச உணவு வழங்குவதற்காக ஏற்கனவே மெகா கிச்சன் ஒன்று செயல்பட்டு வருகிறது.
நாள்தோறும் ஒரு லட்சம் பக்தர்கள் மூன்று வேலையும் சாப்பிடும் வகையில் உணவு தயாரிக்கும் திறன் கொண்ட அந்த கிச்சனுடன் கூடுதலாக புதிய மெகா கிச்சன் ஒன்றை தேவஸ்தான நிர்வாகம் சுமார் 20 கோடி ரூபாய் செலவில் அமைத்துள்ளது.
இதனை ஆந்திர முதல்வர் சந்திரபாவு நாயுடு இன்று தொடங்கி வைத்தார்.
அந்த மெகா கிச்சனை ஆந்திர முதல் சந்திரபாபு நாயுடு இன்று திறந்து வைத்தார். அங்கு சமைக்கப்படும் உணவு பொருட்கள் திருப்பதி மலையில் உள்ள சிஆர்ஓ பகுதி,பக்தர்கள் தங்கும் மண்டபங்கள் ஆகிய இடங்களுக்கு வரும் பக்தர்களுக்கும், திருப்பதி மலையில் செயல்படும் ஃபுட் கோர்ட்டுகள் மூலமாகவும் பக்தர்களுக்கு இலவச உணவாக வழங்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.