கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலாரின் 202-ஆவது அவதார திருநாள் வெகு விமர்சையாக நடைபெற்றது.
சிதம்பரம் அடுத்த மருதூர் கிராமத்தில் பிறந்த வள்ளலார், வடலூரில் சத்திய தருமசாலை, சத்திய ஞான சபை, சன்மார்க்க சங்கம் உள்ளிட்டவற்றை நிறுவி, பொதுமக்களுக்கு ஒழுக்கத்தையும், சன்மார்க்கத்தையும் போதித்தார்.
இந்நிலையில், அவரது 202-வது அவதார தினத்தையொட்டி மேட்டுக்குப்பம் பகுதியில் சன்மார்க்க கொடியேற்றப்பட்டு, அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.