குருவாயூர் கோயில் தேவஸ்தானத்துக்கு சொந்தமாக ஒரு டன்னுக்கும் அதிகமான தங்கம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
குருவாயூர் கோயில் தேவஸ்தானம் பல்வேறு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் 2 ஆயிரத்து 53 கோடி ரூபாய் நிலையான வைப்பு நிதி வைத்துள்ளதாகவும், 271 ஏக்கர் நிலம் வைத்திருப்பதாகவும் தகவல் வெளியானது.
இதைத்தொடர்ந்து தற்போது தங்கம் பற்றிய புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, குருவாயூர் தேவஸ்தானத்திடம் ஆயிரத்து 84 புள்ளி 76 கிலோ தங்கம் இருப்பதாகவும், ரிசர்வ் வங்கியின் தங்க முதலீட்டு திட்டத்தில் மட்டும் 869 கிலோ தங்கத்தை நிர்வாகம் முதலீடு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
கடந்த நிதியாண்டில் வைப்பு நிதி மற்றும் தங்க முதலீடு மூலமாக 7 கோடி ரூபாய்க்கு மேல் தேவஸ்தானத்துக்கு வட்டி வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.