நகர்ப்புற நக்சலைட்டுகளை போல மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தற்போது பேசுவதாக பாஜக தேசிய தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி. நட்டா விமர்சித்தார்.
ஹிமாசல பிரதேச மாநிலம் சிர்மவுரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், சுதந்திரத்துக்குப் பின்னர் காங்கிரஸை கலைக்க வேண்டுமென மகாத்மா காந்தி கூறியதை மேற்கோள்காட்டினார்.
ஆனால் காங்கிரஸ் கட்சியினர் அவர்களது பேராசைக்காக கட்சியைத் தொடர்ந்து நடத்துவதாக குற்றம்சாட்டிய ஜெ.பி. நட்டா, எந்தவொரு கொள்கையுமின்றி காங்கிரஸ் பயணிப்பதாகவும் விமர்சித்தார்.
மேலும் நாட்டைத் துண்டாட நினைக்கும் நகர்ப்புற நக்சலைட்டுகளை போல மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தற்போது பேசி வருவதாக ஜெ.பி. நட்டா கண்டனம் தெரிவித்தார்.