தென்மேற்கு பருவக்காற்று சரிவால் தேனியில் காற்றாலை மின் உற்பத்தி முழுமையாக பாதிக்கப்பட்டது.
ஆண்டிப்பட்டி, கண்டமனூர், மரிக்குண்டு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட காற்றாலைகள் உள்ளன. அண்டை மாநிலமான கேரளாவில் ஜூன் மாத தொடக்கத்தில் தென்மேற்கு பருவக்காற்று வீசியதால் இந்த பகுதிகளில் அமைந்துள்ள காற்றாலைகள் மூலம் அதிக அளவு மின் உற்பத்தி கிடைத்தது.
கடந்த 2 நாட்களாக தென்மேற்கு பருவக்காற்று வீசுவது முழுமையாக நின்றுவிட்டதால் காற்றாலை மின் உற்பத்தி சரிந்து காணப்படுகிறது.