சென்னை மெரினா கடற்கரையில் விமான சாகசத்தை காண வருவோர் வானங்களை நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளன.
காமராஜர் சாலையில் , கடற்கறை சாலை பகுதியில் VIP மற்றும் VVIP களுக்கான கார் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.பிரசிடன்சி கல்லூரி, சுவாமி சிவானந்த சாலை, லேடி வெலிங்டன் கல்லூரி ஆகிய இடங்களில் பார்வையாளர்கள் தங்களின் வாகனங்களை நிறுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாந்தோம் சாலையில், சிஎஸ்ஐ பள்ளி, செயின்ட் பெட்ஸ் மேல்நிலைப் பள்ளி, புனித சாந்தோம் பள்ளி, செயின்ட் பெட்ஸ் மைதானம், கதீட்ரல் ஆரம்ப பள்ளி, சாந்தோம் சமுதாய கூடம், மற்றும் லூப் ரோட்டில் பார்வையாளர்கள் வாகனங்களை நிறுத்தலாம் என்றும்,
ஆர்.கே.சாலையில் MRTS லைட் ஹவுஸ் சாலை, NKT பள்ளி, குயின் மேரிஸ் கல்லூரி, புனித எபாஸ் பள்ளி ஆகிய இடங்களில் வாகனங்களை நிறுத்தலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாலாஜா சாலையில் கலைவாணர் அரங்கம், ஓமந்தூரார் மருத்துவ மைதானம், விக்டோரியா விடுதி மைதானம் ஆகிய இடங்களில் வாகனங்களை நிறுத்தலாம் என்றும்,
அண்ணாசாலையில் தீவுதிடல் மைதானம், PWD மைதானம், எம்.ஆர்.டி.எஸ் சிந்தாதிரிப்பேட்டை, மன்றோ சிலை முதல் பல்லவன் சாலை சந்திப்பு வரை வாகனங்களை நிறுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.